குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்; தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரம்
ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள இடத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குலசேகரப்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான அமராபுரம், கூடல்நகர், அழகப்பபுரம், மாதவன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து நில அளவீடு செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது வேலிகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி இன்னும் 6 மாத காலத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story