'ராக்கிங்' தடுப்பு விழிப்புணர்வு முகாம்


ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 23 July 2023 2:15 AM IST (Updated: 23 July 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

‘ராக்கிங்’ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் மாஜிஸ்திரேட் வனிதா கலந்து கொண்டு பேசும்போது, மாணவர்கள் அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். ராக்கிங் செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். ராக்கிங்கால் ஏற்படும் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும்.

எனவே யாரும் ராக்கிங்கில் ஈடுபட கூடாது என்றார். பின்னர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் செயல்பாடுகள் குறித்து வக்கீல் சங்கர் விளக்கினார். முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதேபோன்று குன்னூரில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வனிதா கலந்துகொண்டு மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.


Next Story