பெண் காவலர்களுக்கு காலை 8 மணிக்கு ரோல்கால் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்


பெண் காவலர்களுக்கு காலை 8 மணிக்கு ரோல்கால் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
x

நாளை முதல் மகளிர் காவலருக்கு காலை 8 மணிக்கு ரோல்கால் (காவலர்கள் வருகை அணிவகுப்பு) நடத்தப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் சேர்ந்து 50 ஆண்டு பொன்விழா நேற்று கொண்டாடப்பட்டது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பெண் காவலர்களுக்கு முதல் அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முக்கியமாக பெண் காவலர்கள் ரோல் கால் என்னும் காவலர்கள் வருகை அணிவகுப்பு காலை 7 மணிக்கு நடத்தப்படுவதற்கு பதிலாக இனி 8 மணிக்கு நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் கொண்டுவந்த திட்டத்தை காவல் துறை நடைமுறைப்படுத்துவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் மகளிர் காவலருக்கு காலை 8 மணிக்கு ரோல்கால் ( காவலர்கள் வருகை அணிவகுப்பு ) நடத்தப்படும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story