காதல் திருமணம் செய்த பெண் தீக்குளிப்பு


காதல் திருமணம் செய்த பெண் தீக்குளிப்பு
x

காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்தார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் உள்ள எம்.தெற்குத்தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி வினோசியா(வயது 22). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வினோசியாவை, அவரது மாமியாரான சீனிவாசனின் மனைவி காந்திமதி(55) வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கடந்த 17-ந் தேதி மழையூர் போலீஸ் நிலையத்தில் வினோசியா புகார் கொடுத்தார். அந்த புகார் மனு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் வினோசியாவை காந்திமதி திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வினோசியா வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டனர். மேலும் இது குறித்து வினோசியாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வினோசியா பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காந்திமதியை, சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story