உளுந்தூர்பேட்டை அருகேகூரை வீட்டில் தீ விபத்து


உளுந்தூர்பேட்டை அருகேகூரை வீட்டில் தீ விபத்து
x
தினத்தந்தி 30 July 2023 12:15 AM IST (Updated: 30 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆர்.ஆர். குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் செல்வராஜ். இவரது கூரை வீடு நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனிடையே, தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story