சேவல் சூதாட்டம்; 4 பேர் கைது


சேவல் சூதாட்டம்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2023 1:45 AM IST (Updated: 15 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

சேவல் சூதாட்டம்; 4 பேர் கைது

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இடையர்பாளையம் மாசாணி அம்மன் கோவில் அருகே ரோந்து வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சேவல் வைத்து சூதாடி கொண்டு இருந்த போகம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 23), பல்லடம் தாலுகா சுக்கம்பாளையத்தை சேர்ந்த கோபால்(33), தேகாணியை சேர்ந்த சரண்(20), சதீஷ்குமார்(27) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், ரூ.5 ஆயிரத்து 250 மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story