பழனி கோவிலுக்கு செல்லும் ரோப் கார் பாறையில் மோதியதால் பரபரப்பு


பழனி கோவிலுக்கு செல்லும் ரோப் கார் பாறையில் மோதியதால் பரபரப்பு
x

ரோப் கார் பெட்டியில் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், பக்தர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ரோப் கார் மூலமாக மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் உச்சிகால பூஜை தரிசனத்திற்காக ஒரு குழுவினர் ரோப் கார் மூலம் மலைக்கு சென்றனர். அப்போது அதிக பாரம் ஏற்றியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த ரோப் கார் பாறை ஒன்றின் மீது மோதியது. பாதி வழியில் நின்ற ரோப் காரின் உள்ளே இருந்த பக்தர்களை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர். ரோப் கார் பெட்டியில் சிறிய சேதம் ஏற்பட்ட நிலையில், பக்தர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story