திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் விரைவில் ரோப் கார் சேவை - அமைச்சர் சேகர் பாபு தகவல்


திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் விரைவில் ரோப் கார் சேவை - அமைச்சர் சேகர் பாபு தகவல்
x
தினத்தந்தி 2 Nov 2023 3:11 AM GMT (Updated: 2 Nov 2023 5:19 AM GMT)

தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சாமி தரிசனம் செய்துவிட்டு தல விருட்சக் கன்றை நட்டு வைத்தார். பின்னர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு நடந்து சென்று சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்குள் 20 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ரூ.5,436 கோடி மதிப்புள்ள 5,680 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். திருநீர்மலை கோவில், திருக்கழுகுன்றம் கோவில், அனுவாவி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ரோப் கார் சேவை அமைக்கும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.


Next Story