புளியந்தோப்பில் ரவுடி வெட்டிக்கொலை


புளியந்தோப்பில் ரவுடி வெட்டிக்கொலை
x

புளியந்தோப்பில் ரவுடியை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது.

சென்னை

சென்னை புளியந்தோப்பு காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு என்ற கார்த்திகேயன் (வயது 36). ரவுடியான இவர் மீது பேசின்பிரிட்ஜ், புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

நேற்று இரவு 9.30 மணி அளவில் கார்த்திகேயன், காந்திநகர் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால்தான் கார்த்திகேயன் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story