தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கியவர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் - காஞ்சீபுரம் மாநகராட்சி நடவடிக்கை


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கியவர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் - காஞ்சீபுரம் மாநகராட்சி நடவடிக்கை
x

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கியவர்களுக்கு காஞ்சீபுரம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ரூ.1½ லட்சம் அபராதம் விதித்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாநகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்துவரும் கடைகளிலும், குடோன்களிலும் சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதித்து வருகிறது.

அந்த வகையில் காஞ்சீபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் குமார், சீனிவாசன், ரமேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் காஞ்சீபுரம் தும்பவனம் ரோடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனை திடீர் சோதனை செய்தனர். அங்கு மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இதனைதொடர்ந்து எண்ணெய்க்காரத்தெரு, கோட்டை கொள்ளை சுப்பராயன் தெரு, ஆனந்தா பேட்டை தெரு போன்ற பகுதிகளில் உள்ள 2 கடைகள், ஒரு குடோனில் வைக்கப்பட்டு இருந்த 450 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story