குழந்தை தொழிலாளரை பணியமர்த்திய 3 நிறுவனங்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
குழந்தை தொழிலாளரை பணியமர்த்திய 3 நிறுவனங்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை கண்டறிய மாவட்ட கலெக்டர் தலைமையில் தொழிலாளர் உதவி ஆணையரை மாவட்ட முதன்மை அதிகாரியாக கொண்டு இயங்கும் மாவட்ட அளவிலான தடுப்பு படையினரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சோமரசம்பேட்டை பகுதியில் ஆய்வு நடைபெற்றது. இதில் மளிகை கடை, பேக்கரி மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பணியில் ஈடுபட்டிருந்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அந்த நிறுவனங்கள் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதன்படி நிறுவன உரிமையாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் 3 நிறுவன உரிமையார்களுக்கும் சேர்த்து, மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story