ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சம் மோசடி


ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சம் மோசடி
x

தென்னங்கன்று வாங்குவதாக கூறி ராணுவ வீரரிடம் ரூ.1 லட்சம் மோசடி நடந்துள்ளது. தானும் ராணுவ வீரர் எனக்கூறி மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

ராணுவ வீரர்

போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 32). ராணுவ வீரர். விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் நித்தியானந்தா. தென்னங்கன்று வியாபாரம் செய்து வருகிறார். இவர் டெலிகிராமில் தென்னங்கன்று விற்பனை குறித்து விளம்பரப்படுத்தி உள்ளார்.

அதைப் பார்த்து நித்யானந்தாவை மஞ்சித் சிங் என்பவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர் இந்தியில் பேசியதால் மொழி புரியாத நித்தியானந்தா தன் உறவினர் வெங்கடேசனுக்கு தொடர்புகொண்டு பேசுமாறு கூறியுள்ளார். இதையடுத்து மஞ்சித் சிங், வெங்கடேசனை தொடர்புகொண்டு, தானும் ராணுவத்தில் பணிபுரிவதாகவும், தனக்கு தென்னங்கன்று அதிக அளவில் தேவைப்படுவதாகவும், மொபைலில் வெங்கடேசனின் 'கியூஆர் கோடை' அனுப்பி வைத்தால் அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்துவதாகவும், தென்னங்கன்றுகளை குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பிவிடுங்கள் எனவும் கூறினார்.

பணம் எடுக்கப்பட்டது

இதையடுத்து வெங்கடேசன் தன் 'கியூஆர் கோடை' மஞ்சித் சிங்குக்கு அனுப்பியவுடன், வெங்கடேசன் வங்கி கணக்கிலிருந்து, 1 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story