வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி


வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது..இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனில் பேசிய பெண்

வேதாரண்யம் தோப்புத்துறையை சேர்ந்தவர் சிக்கந்தர் ஷாஜா (வயது 24). கடந்த 2-ந்தேதி இவரிடம் செல்போனில் ஒரு பெண் பேசியுள்ளார். அப்போது சிக்கந்தர் ஷாஜாவுக்கு அந்த பெண், பிரபல தனியார் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய அவர் 7 தவணைகளில் அவர் கூறிய வங்கி கணக்கு ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 50 அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த பெண் வேலையில் சேர்வதற்கான நியமன ஆணையை செல்போன் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

போலீசில் புகார்

இதை எடுத்து கொண்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனிக்கு சென்று அவர் கேட்ட போது, அந்த நியமன ஆணை போலி என்பது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிக்கந்தர் ஷாஜா நாகை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story