மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு


மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
x

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம்: ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு.

சென்னை,

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவிகள் மாதம் ரூ.1,000 ஆயிரம் பெறுவதற்கான திட்டத்துக்கு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த ஆண்டு சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதித்துறை அமைச்சர், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவித் திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த அனைத்து மாணவிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, பாராமெடிக்கல் படிப்புகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ. சான்றிதழ் கல்வி உள்ளிட்ட படிப்புகளை தடங்கல் இல்லாமல் படிக்கும் நிலையில் அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்' என அறிவித்தார். இந்தத் திட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என்று கணக்கிடப்பட்டு ரூ.698 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந் தேதி அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story