பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்: ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்


பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்: ஒன்றிய மாநாட்டில் தீர்மானம்
x

பூசாரிகளுக்கு மாத ஊக்கத்ெதாகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என மண்மங்கலத்தில் நடந்த ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கரூர்

ஒன்றிய மாநாடு

கரூர் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கரூர் ஒன்றிய மாநாடு மண்மங்கலத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகேசன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து ஜி கலந்து கொண்டு பேசினார்.

மாநாட்டில் கோவில்களில் பூஜை செய்து கொண்டு பணியில் இருக்கும் பூசாரிகளுக்கு மாதம் ஊக்கத்ெதாகை யாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

அனைத்து கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும், அனைத்து கிராம நலிவடைந்த கோவில்களுக்கு திருப்பணி நிதி தாமதமின்றி வழங்க வேண்டும்.

தொகுப்பு வீடு வேண்டும்

மாத ஓய்வூதியம் பெற்று வரும் பூசாரி மரணம் அடைந்தால், அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் நல வாரிய உறுப்பினர் அட்டை பெறுவதற்கு கோரப்பட்டு வரும் வருவாய் சான்றிதழை முற்றிலும் அரசு ரத்து செய்ய வேண்டும், மேலும், நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கும் பூசாரிகளுக்கு நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும், அனைவருக்கும் இலவச வீட்டு மனைபட்டா, தொகுப்பு வீடு வழங்க வேண்டும், பட்டா இல்லாத கோவில்களுக்கு வரையறைப்படுத்தி அரசு பட்டா வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பூசாரிகள் பேரமைப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story