சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்


சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்
x

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபாராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முகக்கவசம் அணிவதை கண்காணிக்க மண்டலம் வாரியாக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தற்போது, தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், kஒரோனா தடுப்பு முறைகளைத் தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு பொதுசுகாதாரச் சட்டம் 1939-இன்படி, முகக்கவசம் அணியாதவா்களுக்கு ஜூன் 6-ம் தேதி முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ஜூன் 6-ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல் நாளில் மட்டும் 121 பேருக்கு ரூ.60,500 அபராதம் வசூலானது.


Next Story