கேரள மருத்துவமனையில் இருந்து மருந்து வாங்கி ரூ.1.20 கோடி மோசடி


கேரள மருத்துவமனையில் இருந்து மருந்து வாங்கி ரூ.1.20 கோடி மோசடி
x

கேரள மருத்துவமனையில் இருந்து மருந்து வாங்கி ரூ.1.20 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

ரூ.1.20 கோடி மோசடி

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் திருச்சியை சேர்ந்த மருந்தக உரிமையாளரான ரஞ்சித் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.1 கோடியே 70 லட்சத்து 19 ஆயிரத்துக்கு மருந்து வாங்கினார். அப்போது ரூ.50 லட்சத்தை ரஞ்சித் கொடுத்துள்ளார். மீதி தொகைக்காக அவர் கொடுத்த காசோலைகள் வங்கியில் பணம் இன்றி திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் கேட்டபோது, அவர் ரூ.1.20 லட்சத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், ரஞ்சித் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணம் பறித்தவர் கைது

*திருச்சி தில்லைநகர் பகுதியில் தேவர் காலனி சாலையில் கடந்த 11-ந்தேதி சாலையில் ரூ.2 லட்சம் கிடந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண் கண்டெடுத்து தில்லைநகர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த பணத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து, அது யாருடைய பணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*திருச்சி கீழபுலிவார்டு பகுதியை சேர்ந்த நன்முருகன் (51) கீழஆண்டாள் தெருவில் சென்று கொண்டிருந்த போது, அவரை மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்துச்சென்ற வழக்கில் தாராநல்லூரை சேர்ந்த அய்யப்பனை (29) கோட்டை போலீசார் கைது செய்தனர்.

தாயை தாக்கியவர் கைது

*திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் நேற்று ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரகுமான்(45), ஜாகிர் உசேன்(45), மூர்த்தி(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 ேபரையும் போலீசார் கைது செய்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

*உப்பிலியபுரம் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சி காட்டுக்கொட்டகையை சேர்ந்த நடராஜனின் மகன் தீபக்(26). இவர் நேற்று காலை தனது தாய் கவிதாவிடம், தொழில் செய்ய பணம் கேட்டதாகவும், அவர் பணம் கொடுக்க மறுத்ததால், வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, கவிதாவை தாக்கியதாகவும் தெரிகிறது. இது குறித்து கவிதா கொடுத்த புகாரின்பேரில், உப்பிலியபுரம் போலீசார் தீபக் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


Next Story