ரூ.15 கோடி சுருட்டிய மோசடி மன்னன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - சொத்துகள் பறிமுதல்


ரூ.15 கோடி சுருட்டிய மோசடி மன்னன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - சொத்துகள் பறிமுதல்
x

சென்னை வில்லிவாக்கத்தில் ரூ.15 கோடி சுருட்டிய மோசடி மன்னனை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

சென்னை

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மோசடி மன்னன் பி.எம்.ரெட்டி என்ற முத்துகிருஷ்ணன், ரூ.15½ கோடி மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். என்ஜினீயரிங் கல்லூரி மேம்பாட்டுக்காக ரூ.200 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.15½ கோடி கமிஷன் தொகை பெற்று மோசடி செய்துவிட்டதாக முத்துகிருஷ்ணன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முத்துகிருஷ்ணன் குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது பினாமி பெயரில் வாங்கி வைத்திருந்த 120 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 அசையா சொத்துகள் முடக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். முத்துகிருஷ்ணனின் கூட்டாளிகள் பெயரில் உள்ள 15 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


Next Story