திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தல் தங்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பேஸ்ட் வடிவில்...

அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் தனது உடைமையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், அவர் திருச்சியை சேர்ந்த லோகநாதன் என்பதும், ரூ.16 லட்சம் மதிப்பிலான 292 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story