தொழில் அதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி


தொழில் அதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி
x

தொழில் அதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி சின்னக்கடை வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 43). இவர் லாஜிக் பயோமெடிக்கல் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- எனது நண்பரான நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்குமார் மருத்துவ உபகரணங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். கொரோனா காலகட்டத்தின்போது, என்.95 முககவசத்தை மொரீஷியஸ் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தார். இதற்காக 3 ஆயிரத்து 340 டாலர் பணத்தை வங்கி வரைவோலையாக பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் என்னை சந்தித்து வங்கியில் அளிக்கப்பட்ட வங்கி வரைவோலை நகலை காண்பித்து, ரிசர்வ் வங்கியில் பணத்தை டாலரில் இருந்து இந்திய ரூபாயாக மாற்றுவதற்கு ரூ.17 லட்சம் வேண்டும் என்று கேட்டார். இதை நம்பி ரூ.16 லட்சத்து 90 ஆயிரத்தை ரமேஷ்குமாரின் வங்கி கணக்கில் செலுத்தினேன். அதன்பிறகு அவர் அந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story