விழுப்புரத்தில்அரசு பஸ் டிரைவரிடம் ரூ.2 லட்சம் அபேஸ்மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் அரசு பஸ் டிரைவரிடம் ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டியை அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக 3-வது பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அதை ஒரு பையில் போட்டு அந்தப்பையை தனது ஸ்கூட்டரில் வைத்து புறப்பட்டார்.
ரூ.2 லட்சம் அபேஸ்
விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு பின்னர் பெட்ரோல் நிரப்புவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் சென்று ஸ்கூட்டரின் சீட்டை திறந்து பெட்டியை பார்த்தபோது அதிலிருந்த பணப்பையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த சமயத்தில் யாரோ மர்ம நபர்கள், அவரது ஸ்கூட்டரின் சீட் பெட்டியை திறந்து பணத்தை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.இதுகுறித்து ஆறுமுகம், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.