கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
கோயம்புத்தூர்
கோவை கணபதி நேருநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர்ராஜ் (வயது 65). இவர் காந்திபுரம் 3-வது வீதியில் மெட்டல் கடை நடத்தி வருகிறார். கடந்த 8-ந் தேதி இரவில் அவர் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடையை திறக்கவில்லை. தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் கிறிஸ்டோபர்ராஜ் தனது கடையின் ஷட்டரை திறந்துவிட்டு உள்ளே சென்றார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதுபோன்று பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே சிதறி கிடந்தன. அதில் இருந்த ரூ.3 லட்சத்து 11 ஆயிரத்தை காணவில்லை. இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story