ரூ.46 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கியது
மதுரை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கியது.
மதுரை
மதுரை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கியது.
மதுரை விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இலங்கையிலிருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் மதுரை விமான நிலையத்தில் முகாமிட்டனர். பின்னர் அவர்கள் இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ரூ.46 லட்சம்
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்திய போது அவரிடம் கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அதிகாரிகள் அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ரூ.46 லட்சம் மதிப்புள்ள 900 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரிடம் ஏதேனும் கடத்தல் தங்கம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம்