ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில்
சொத்து பட்டியல் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி கேட்டபடி ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை,
வழக்கறிஞர் பால்கனராஜ் மூலம் பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதியின் வக்கீல் நோட்டீஸ்க்கு பதில் அளித்துள்ளார். அதில்,
திமுக குறித்த அண்ணாமலையின் கருத்து மற்றும் குற்றச்சாட்டு உண்மையே. யாரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவமானம் செய்வது செய்தியாளர் சந்திப்பில் நோக்கமில்லை. சொத்து பட்டியல் விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதி கேட்டபடி ரூ.500 கோடி இழப்பீடு தரமுடியாது. ரூ.500 கோடி இழப்பீடு தரும்படி சட்டத்திலும் இடம் இல்லை. திமுகவினர் சேர்த்துள்ள ஊழல்களை அடிப்படை ஆதாரங்களுடன் வெளிகொண்டு வந்திருக்கிறார் என்றார். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் வில்சன் அனுப்பிய நோட்டீஸ்க்கு அண்ணாமலை தரப்பு பதில் அளித்துள்ளது.
Related Tags :
Next Story