தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.7 கோடி கடன் உதவி


தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.7 கோடி கடன் உதவி
x
தினத்தந்தி 26 Aug 2023 8:39 AM GMT (Updated: 26 Aug 2023 9:18 AM GMT)

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் குறு சிறு தொழில் முனைவோருக்கு ரூ.7.42 கோடி கடன் உதவியை கலெக்டர் ஆஸ்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் தொழில் கடன் முகாம் நடைபெற்றது. இதில் 8 குறு சிறு தொழில் முனைவோருக்கு ரூ.7.42 கோடி மதிப்பீட்டில் தொழில் கடன் உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து குறு சிறு தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்கள் ரூ.26.70 கோடிக்கான கடன் விண்ணப்பங்களை கலெக்டரிடம் வழங்கினர். கடன் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள நபர்களுக்கு தேவையான கடன் உதவிகளை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

முகாமில் மாவட்ட கலெக்டர் பேசும்போது:- தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதி கழகமாகும். இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடன் உதவி மற்றும் மானிய சலுகைகளை வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது. மேலும் திருவள்ளூர் கிளை அலுவலகமான 86 சி-பி 2-வது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 01-09-2023 வரை கடனுதவி முகாம் நடைபெறுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.150 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும். இந்த முகாம் நடைபெறும் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.

எனவே இதனை அனைவரும் முழுமையாக பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.


Next Story