நூதன முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7½ லட்சம் அபேஸ்


நூதன முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7½ லட்சம் அபேஸ்
x

நூதன முறையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7½ லட்சம் அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா கூனிமேடு செட்டிநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 27). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை என்று இருந்ததை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர் ஒருவர், ரவியிடம், உங்களுடைய செல்போனுக்கு ஒரு லிங்க் அனுப்புவதாகவும், அந்த லிங்கிற்குள் சென்று சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறியுள்ளதோடு அடுத்த சில நிமிடத்தில் ஒரு லிங்க்கை அனுப்பினார்.

உடனே ரவி, அந்த லிங்கிற்குள் சென்று தனது வங்கி கணக்கு மற்றும் நண்பர்கள் சிலரின் வங்கி கணக்கில் இருந்து அந்த மர்ம நபர் அனுப்பிய வங்கி கணக்குகளுக்கு போன்பே, கூகுள்பே, பேடிஎம் மூலம் மொத்தம் ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 180-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் ரவிக்கு சேர வேண்டிய தொகையை அந்த மர்ம நபர் தராமல் ஏமாற்றி விட்டார். பலமுறை அவரை தொடர்பு கொண்டபோதிலும் எந்தவொரு பதிலும் இல்லை.

இதுகுறித்து ரவி, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story