வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி


வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி
x

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுதி நேர வேலை

சிவகங்கை பனங்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 33). இவர் இன்ஸ்டாகிராம் செயலியை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அதில் வந்த பகுதி நேர வேலைக்கான விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த மெயிலில் தொடர்பு கொண்டபோது பேசிய ஒருவர் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும், பணம் அனுப்புமாறும் அவரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய பாண்டியராஜன் முதல்கட்டமாக ரூ.10 ஆயிரத்தை அனுப்பினார்.

தொடர்ந்து அந்த நபர் பாண்டியராஜன் வங்கி கணக்கில் ரூ.20 ஆயிரத்து 450-ஐ வரவு வைத்துள்ளார். பின்னர் பாண்டியராஜன் ரூ.33 ஆயிரத்து 851-ஐ அனுப்பி உள்ளார். அந்த நபர் பாண்டியராஜன் வங்கி கணக்கில் ரூ.44 ஆயிரத்து 600-ஐ வரவு வைத்துள்ளார்.

ரூ.8½ லட்சம் மோசடி

இதனை நம்பிய அவர் ஏற்கனவே அனுப்பிய வங்கி கணக்கிற்கு 10 தவணைகளில் ரூ.8 லட்சத்து 47 ஆயிரத்து 236-ஐ அனுப்பி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நபர் பாண்டியராஜனுடனான தொடர்பை துண்டித்து விட்டாராம். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாண்டியராஜன் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story