அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8¾ லட்சம் மோசடி; ஒருவர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8¾ லட்சம் மோசடி; ஒருவர் கைது
x

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8¾ லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

கீரனூரை சேர்ந்த ஸ்ரீதரனின் மனைவி கார்த்திகா (வயது 27). இவர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் (45) அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சத்து 85 ஆயிரம் வாங்கி கொண்டு, வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பின் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story