மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.9 லட்சம் உண்டியல் வசூல்


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.9 லட்சம் உண்டியல் வசூல்
x

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.9 லட்சம் உண்டியல் வசூலாகி உள்ளது.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.9 லட்சம் உண்டியல் வசூலாகி உள்ளது.

உண்டியல் வசூல்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல்கள், 7 குடங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நேற்று குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் ஆறுமுகநயினார், கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில் ரூ.9 லட்சத்து 16 ஆயிரத்து 27 ரொக்கமாகவும், 33.800 கிராம் தங்கம், 317 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன. இது கடந்த 35 நாட்களுக்கான உண்டியல் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story