வைகை தண்ணீர் தேக்கிய ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் தண்ணீரின்றி வறண்டது


வைகை தண்ணீர் தேக்கிய ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் தண்ணீரின்றி வறண்டது
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயும் தண்ணீர் இன்றி வறண்டது.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயும் தண்ணீர் இன்றி வறண்டது.

கண்மாய்

தமிழகத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊரில் அமைந்துள்ள பெரிய கண்மாய். அதுபோல் ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 2 மாவட்டங்களைச் சேர்ந்த பல கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் உள்ள தண்ணீரை நம்பி பாசன வசதி பெற்று வருகின்றன. அதுபோல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையே பெய்யாத நிலையிலும் வைகை அணையில் இருந்து தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயில் ஓரளவு தண்ணீர் இருப்புடன் காட்சி அளித்து வந்தது.

ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயில் தேக்கி வைக்கப்பட்ட வைகை தண்ணீரை பயன்படுத்தி தான் ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் இந்த ஆண்டு விவசாயிகள் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட விவசாயத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.

வறண்டது

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாயிலும் தற்போது தண்ணீர் முழுமையாக வற்றி கண்மாயானது வறண்டு காட்சியளித்து வருகின்றது. இதனால் கண்மாய் பகுதிகளில் வெடிப்புகள் விழுந்தும் பாலைவனம் போல் தெரிந்து வருகின்றது.

அதுபோல் கண்மாயில் ஒரு புறம் இளைஞர்கள் தண்ணீர் இல்லாததை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். பல மாதங்களாக வைகை தண்ணீர் இருப்புடன் காட்சி அளித்து வந்த ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருவதால் அந்த வழியாக தினமும் இருசக்கர வாகனம், பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் செல்லும் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த வேதனையோடு பெரிய கண்மாயை பார்த்து செல்கின்றனர்.


Next Story