பெண்களுக்கு ஆட்டோ, கால் டாக்சி வாங்க ரூ.1 லட்சம் மானியம்தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்


பெண்களுக்கு ஆட்டோ, கால் டாக்சி வாங்க ரூ.1 லட்சம் மானியம்தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்
x

பெண் ஓட்டுனர்கள் ஆட்டோ, கால் டாக்சி வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக தொழிலாளர் உதவி ஆணையாளர் த.முருகேசன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

பெண் ஓட்டுனர்கள் ஆட்டோ, கால் டாக்சி வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுவதாக தொழிலாளர் உதவி ஆணையாளர் த.முருகேசன் தெரிவித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பதிவு பெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) த.முருகேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொடர்பான 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விதமான விண்ணப்பங்களும் tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறையின் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

நலவாரியங்கள் மூலமாக பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குழந்தைகளின் கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி வாங்குதல், இயற்கை மரணம், விபத்து மரணம் போன்றவற்றுக்கு உதவித்தொகையும், 60 வயது முடிந்தவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகிறது. வீட்டு வசதி திட்டத்தில் அதிக தொழிலாளர்கள் விண்ணப்பித்து பயன் அடைய வேண்டும்.

விழிப்புணர்வு

பெண் ஓட்டுனர்களுக்கு புதிய ஆட்டோ, டாக்சி வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெண்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவா் கூறினார்.

இதில் தகவல் அறியும் உரிமை சட்டம், ஊழல் தடுப்பு ஆகியன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தங்கமுத்து, கோபால், சின்னசாமி, மலைச்சாமி, மாநில அமைப்பு சாரா டிரைவர் நலவாரிய உறுப்பினர் மனோகரன், மாநில பனைமர தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் பழனிசாமி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story