மகளிர் மதிப்பு திட்டத்தில் ரூ.130 கோடி முதலீடு ஈர்ப்பு: அகில இந்திய அளவில் திருச்சி மத்திய மண்டலம் முதலிடம்


மகளிர் மதிப்பு திட்டத்தில் ரூ.130 கோடி முதலீடு ஈர்ப்பு: அகில இந்திய அளவில் திருச்சி மத்திய மண்டலம் முதலிடம்
x

மகளிர் மதிப்பு திட்டத்தில் ரூ.130 கோடி முதலீடு ஈர்த்ததில் அகில இந்திய அளவில் திருச்சி மத்திய மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.

திருச்சி

அஞ்சல்துறையில் மகளிர்மதிப்புதிட்டம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி பெண்களுக்கென்று தொடங்கப்பட்டது. இந்த 2 வருட சிறப்பு திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். மத்திய மண்டலத்தில் இதுவரை 46 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டு, இதன் மூலம் சுமார் ரூ.130 கோடி முதலீடு ஈட்டப்பட்டு, அகில இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. இந்த திட்டத்தை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் திருச்சி மத்திய மண்டல தலைவர் கடந்த 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை அன்னையர் தினத்தின் முகமாக சிறப்பு மேளா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இந்த சிறப்பு மேளாவில் மகளிர் மதிப்பு திட்டம் மற்றும் இதர அஞ்சல் சேவைகள் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டன. 2023 அன்னையர் தின சிறப்பு மேளாவில் மகளிர் மதிப்பு திட்டத்தில் இணைந்தவர்களுக்கு அறிவித்தபடி, மூன்று கட்ட அதிர்ஷ்ட குலுக்கல் நேற்று திருச்சி தலைமை அஞ்சலகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டு, 15 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பரிசாக ஜுசர் மிக்ஸர், இண்டக்சன் ஸ்டவ், குக்கர் முதலியன வழங்கப்பட்டன. மேலும், அனைத்து பெண்களும் இந்த சிறப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும். இந்த தகவலை திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார்.


Next Story