கட்டுமான பணிக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு


கட்டுமான பணிக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு
x

கட்டுமான பணிக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் நேற்று கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் புதிய கட்டிடங்கள் கட்டுமான பணிக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசு அறிவித்துள்ளதாகவும், அதற்கும் நன்றி தெரிவித்தார். மேலும் நகராட்சியில் தூய்மை பணி தனியார் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அதன் மூலம் குப்பை இல்லா நகரமாக புதுக்கோட்டை மாறும், என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். இதில் அ.தி.மு.க.-தி.மு.க. கவுன்சிலர்களிடையே கார சார விவாதம் நடந்தது. மேலும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளில் தி.மு.க. நிர்வாகிகள் கவுன்சிலர்கள் போல செயல்படுவதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story