எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரிஅ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரிஅ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சந்திரசேகரன், ரவிச்சந்திரன், சிவக்குமார், பேரூர் செயலாளர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் வினோத் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைப்புச்செயலாளர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மீண்டும் அவர்கள் வேளாண் பணி தொடங்க விலை இல்லா விதைகள், உரங்கள் வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் முறையாக 100 சதவீதம் வழங்கப்பட்டது என்றார்.

ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்

முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சக்தி, ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் செல்லையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், தரங்கம்பாடி தாலுகாவில் விடுபட்ட 8 ஊராட்சிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மயிலாடுதுறை நகர செயலாளர் செந்தமிழன், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் நாகரத்தினம், சீனிவாசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story