ரூ.60 லட்சம், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன


ரூ.60 லட்சம், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன
x
தினத்தந்தி 17 Sept 2023 1:15 AM IST (Updated: 17 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் மற்றும் தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் நடந்த என்.ஐ.ஏ. சோதனையில் ரூ.60 லட்சம், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அமெரிக்க டாலர்களும் சிக்கின.

கோயம்புத்தூர்


தமிழகம் மற்றும் தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் நடந்த என்.ஐ.ஏ. சோதனையில் ரூ.60 லட்சம், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அமெரிக்க டாலர்களும் சிக்கின.


இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


ரூ.60 லட்சம், அமெரிக்க டாலர்கள்


ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை தீவிரப்படுத்துதல் மற்றும் அந்த அமைப்புக்கு ஆள்சேர்ப்பு பிரசாரம் போன்றவற்றை ஒடுக்கும் வகையில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தமிழகம், தெலுங்கானாவில் 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதுதவிர ரூ.60 லட்சம் மற்றும் 18 ஆயிரத்து 200 அமெரிக்க டாலர்கள், உள்ளூர் மற்றும் அரபு மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் வகையில் அரபிக் பாடசாலையில் மூளைச்சலவை செய்து உள்ளனர்.


பயங்கரவாதிகளாக மாற்ற சதி


அரபு மொழி வகுப்புகளை நடத்தும் போர்வையில் பயங்கர வாதத்தை போதித்து உள்ளனர். இது தொடர்பாக வாட்ஸ்-அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவிக் கப்பட்டு, அதன் மூலம் இளைஞர்களை தேர்வு செய்து உள்ளனர். குறிப்பாக ஐ.எஸ். பயங்கரவாதத்தை சேர்ந்தவர்களின் தூண்டுதலின்பேரில் இவ்வாறு செயல்பட்டு உள்ளனர்.


இது நமது நாட்டின் அரசியலமைப்பு ரீதியாக நிறுவப்பட்ட மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிரானது. இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள், பயங்கரவாத மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட இளைஞர்களை பயங்கர வாதிகளாக மாற்றும் சதியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


நடவடிக்கை தொடரும்


நாட்டின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மற்றும் சீர்குலைக்கும் நோக்கத்துடன், பயங்கரவாதத்தை பரப்பும் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் என்.ஐ.ஏ. தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



Next Story