அரசு வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் ஊராட்சி தலைவரிடம் ரூ.8½ லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்குப்பதிவு


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  முன்னாள் ஊராட்சி தலைவரிடம் ரூ.8½ லட்சம் மோசடி  2 பேர் மீது வழக்குப்பதிவு
x

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் ஊராட்சி தலைவரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சேலம்

சேலம்

முன்னாள் ஊராட்சி தலைவர்

ஏற்காடு செம்மநத்தம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 55). விவசாயியான இவர் முன்னாள் செம்மநத்தம் ஊராட்சி தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஊராட்சி தலைவராக சிதம்பரம் இருந்த போது செல்வபாரதி என்பவர் அறிமுகமானார்.

அப்போது சிதம்பரத்திடம் தனது உறவினர் சசிகுமார் என்பவர் மத்திய அரசு துறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், அவருக்கு எஸ்டேட் ஒன்று விலைக்கு வாங்க வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக சிதம்பரத்தை அவர் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அக்ரி படிப்பு முடித்துள்ள உங்களது மகனுக்கு மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.

ரூ.8½ லட்சம் மோசடி

இதை நம்பிய சிதம்பரம் அவரிடம் ரூ.8½ லட்சம் வரை கொடுத்தார். ஆனால் வேலை வாங்கி கொடுக்காமல் சசிகுமார் ஏமாற்றி வந்தார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்ட சிதம்பரத்திற்கு அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவை சந்தித்து சிதம்பரம் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஷ்யம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதையடுத்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் ஊராட்சி தலைவரிடம் மோசடி செய்ததாக சசிகுமார், செல்வபாரதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற்னார்.


Next Story