திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.8 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. முன்னதாக விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, ஒரு ஆண் பயணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அவற்றில் அமெரிக்க டாலர்கள் இருந்தது. இந்திய மதிப்பில் ரூ.8 லட்சம் அமெரிக்க டாலர்கள் இருந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story