ரூ.9 ஆயிரம் கோடி விவகாரம் - தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிஇஓ ராஜினாமா
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சிஇஓ கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கணக்கு வைத்துள்ள கார் டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகவே அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story