ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம்


ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம்
x

பட்டுக்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் நேற்று மாலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. பட்டுக்கோட்டை காசாங்குளம் கீழ்கரையில் உள்ள அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் அப்பாசாமி, மாவட்ட செயலாளர் பழனிவேலு ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. ஊர்வலத்திற்கும், பொதுக்கூட்டத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

1 More update

Next Story