ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 18-வது நாளாக வேலை நிறுத்தம்


ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்                 18-வது நாளாக வேலை நிறுத்தம்
x

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி 18-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி குலசேகரத்தில் நேற்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி 18-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி குலசேகரத்தில் நேற்று தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலை நிறுத்தம்

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் தொழிலாளர்கள் ரப்பர் கழக கோட்ட மேலாளர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 18-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இதையொட்டி கோதையாறு, சிற்றாறு, மணலோடை மற்றும் கீரிப்பாறை கோட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தினர்.

தற்போது நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் காரணமாக ரப்பர் கழகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைபோன்று தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்பட்டு வருகிறது.

குலசேகரத்தில் ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்ட சி.ஐ.டி.யு. தோட்டம் தொழிலாளர் சங்கத்தினர் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் எம்.வல்சகுமார், தலைவர் பி.நடராஜன் மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story