விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்


விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
x

விபத்துகளை குறைக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு சமூக இயக்கங்கள் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் நடத்தது.

காஞ்சிபுரம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில், விபத்துகளை குறைக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்க, போக்குவரத்து நெரிசலை குறைக்க பொது போக்குவரத்து பயன்படுத்துவோம் பலப்படுத்துவோம் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் 22 நகரங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பூவுலகின் நண்பர்கள் மற்றும் பல்வேறு சமூக இயக்கங்கள் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் நடத்த திட்டமிட்டு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்ட அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் செயலாளர் நந்தகோபால் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி பெரியார் நகர் அருகே தொடங்கியது. காஞ்சீபுரம் பெரியார் நகரில் தொடங்கிய விழிப்புணர்வு மாரத்தான் பஸ் நிலையம் அருகே நிறைவு பெற்றது.

"நிறைவு விழாவில் காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.1,000 என மூன்று இடங்களுக்கும் மற்றும் ஏழு பேருக்கு தலா ரூ.500 என 10 நபர்களுக்கு வழங்கினார். அதேபோல் பெண்கள் பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் பல பரிசுகளை அரசு பள்ளி மாணவர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில் சி.ஐ.டி.யு. மூத்த நிர்வாகி முத்துக்குமார், காஞ்சீபுரம் மாவட்ட போக்குவரத்து ஊழியர் சம்மேளன செயலாளர் சீனிவாசன், மாரத்தான் ஒருங்கிணைப்பாளர் மதுசூதனன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story