ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது.

10 அம்ச கோரிக்கைகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். உதவி இயக்குனர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் நிலை, பதவி உயர்வு ஆணைகளை கால தாமதமின்றி வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிகள் முடங்கின

இதன் காரணமாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பணிக்கு வரவில்லை. இதனால் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற வேண்டிய பணிகள் 2 நாட்களாக நடைபெறாமல் முடங்கின.


Next Story