ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2-வது நாளாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின, இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகள் முற்றிலுமாக கைவிட வேண்டும். வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று 2-வது நாளாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் உள்ள 346 பேரில், 160 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து பணிக்கு வராததால் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களிலும், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையென்றால் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story