கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோட்டத்தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாநில உதவி செயலாளர் ஜேக்கப் ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கிராமிய அஞ்சல் ஊழியர்களை டார்கெட் என்ற பெயரில் கொடுமைப்படுத்தும் உபகோட்ட அதிகாரிகளை கண்டித்தும், சேலம் கூட்டுறவு சங்கத்தில் கூடுதலாக பிடித்த பணத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் ஞானபாலசிங், பொருளாளர் திருமால், நிர்வாகிகள் பண்டாரம், அரிகரசுதன். கிறிஸ்டோபர், பத்மநாபன், முத்தையா, கற்பகராஜ், ஆறுமுகம், அருணாசலம், சிதம்பரம், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story