திருப்பத்தூரில் ஊரக சுயதொழில் பயிற்சி கட்டிடம், சிறுவர் பூங்கா


திருப்பத்தூரில் ஊரக சுயதொழில் பயிற்சி கட்டிடம், சிறுவர் பூங்கா
x

திருப்பத்தூரில் ஊரக சுயதொழில் பயிற்சி கட்டிடம், சிறுவர் பூங்கா அமைய உள்ள இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி புதுப்பேட்டை சாலை அருகே தென்னக ெரயில்வே நிலத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட நூலகம், அருங்காட்சியகம் மற்றும் ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன கட்டிடம், 3 மாணவ, மாணவியர்கள் நல விடுதிகள், சிறுவர் பூங்கா, அதற்கான சாலை வசதி ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

இந்த இடத்தை கலெக்டர் அமர் குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாச்சல் ஊராட்சிக்குட்பட்ட ஜெய்பீம்நகர் அங்கன்வாடி மைய கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கு.செல்வராசு, தாசில்தார் சிவபிரகாசம், நகரமன்ற உறுப்பினர் மனோகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story