எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா


எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி திறப்பு விழா
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரியை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி

வாசுதேவநல்லூர் கே.சுப்பிரமணிய நாடார்- வடிவம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது.

தற்போது மத்திய மாநில அரசின் அனுமதியுடன் வாசுதேவநல்லூரில் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. சட்டக் கல்லூரி தொடக்க விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

எஸ்.தங்கப்பழம் கல்வி குழும நிறுவனர் எஸ்.தங்கப்பழம் தலைமை தாங்கினார். கல்வி குழும நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் முன்னிலை வகித்தார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வி.பவானி சுப்புராயன், தாரணி மற்றும் பால்தாய் தங்கப்பழம், ரம்யாதேவி முருகேசன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். சட்டக் கல்லூரி துணை முதல்வர் காளிச்செல்வி வரவேற்று பேசினார்.

சபாநாயகர்-நீதிபதிகள்

சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிமோட் மூலம் சட்டக் கல்லூரி கல்வெட்டை திறந்து வைத்தார். கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐகோர்ட்டு நீதிபதிகள் பவானி சுப்புராயன், தாரணி ஆகியோர் சட்டக் கல்லூரி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். கல்லூரியில் மாணவர் சேர்க்கையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். கல்லூரி கலையரங்கத்தை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார்.

நீதிபதிகள் குமரகுரு, பன்னீர்செல்வம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைகுமார் (வாசுதேவநல்லூர்), பழனி நாடார் (தென்காசி), கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா (கடையநல்லூர்), தங்கபாண்டியன் (ராஜபாளையம்), தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் முத்தையா பாண்டியன், ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா தேவி, பாளையங்கோட்டை யூனியன் தலைவர் ேக.எஸ்.தங்கப்பாண்டியன், வாசுதேவநல்லூர் யூனியன் துணைத்தலைவர் எம்.சந்திரமோகன், வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன்,

சென்னை, கோவில்பட்டி, சென்னை ஆகிய இடங்கிளில் இயங்கி வரும் ஜெயகுரு குரூப் ஆப் கம்பெனிஸ் நிர்வாக இயக்குனர்கள் ராஜா ஜெயபால், சரவணகுரு, அரசு ஒப்பந்ததாரரும், கடையநல்லூர் ராஜா கன்ட்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் உரிமையாளருமான ரவிச்சந்திரன் என்ற ரவி ராஜா, வாசுதேவநல்லூர் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கு.தவமணி, தொழிலதிபர் சுமங்கலி. கே.சமுத்திரவேலு, அரசு ஒப்பந்ததாரர் கடையநல்லூர் ரவிச்சந்திரன் என்ற ரவி ராஜா, சிந்தாமணி செயின்ட் மேரிஸ் மகப்பேறு மருத்துவமனை உரிமையாளர் ஜேம்ஸ், புளியங்குடி நகர தி.மு.க. செயலாளரும் நகரமன்ற துணைத் தலைவருமான ஏ.அந்தோணிசாமி, புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன்,

அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி பாண்டியன், சிந்தாமணி ஸ்ரீகணபதி முருகன் சாமில் உரிமையாளர் பா.கருப்பசாமி, புளியங்குடி அன்னை மீனாட்சி கல்வி குழும நிர்வாகி முருகன், வாசுதேவநல்லூர் சாமி டிரேடர்ஸ் உரிமையாளர்கள் கா.இசக்கிராஜா, கா.அய்யர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், எஸ்.தங்கப்பழம் கல்வி குழும ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின், முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.



Next Story