மளிகைக்கடை உரிமையாளர் விபத்தில் பலி


மளிகைக்கடை உரிமையாளர் விபத்தில் பலி
x

நாமக்கல் அருகே மளிகைக்கடை உரிமையாளர் விபத்தில் இறந்தார்.

நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது44). இவர் நாமக்கல் - சேலம் சாலை முருகன் கோவில் பஸ்நிறுத்தம் அருகே மளிகைக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

பின்னர் மளிகைக்கடைக்கு திரும்பிய அவர், சாலையோரம் இருந்த மண்ணில் சென்றபோது நிலைதடுமாறி சறுக்கி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ரமேஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story