அரசு பள்ளியில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு


அரசு பள்ளியில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு
x

கரிவலம்வநல்லூர் அரசு பள்ளியில் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில் ஆ.மருதப்பன் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைகுமார் ஆய்வு செய்தார். ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர்களிடையே அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார்.

அப்போது தி.மு.க. மாவட்ட கவுன்சிலரும், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளருமான மதி மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் அழகையா ரவி, ஸ்தோவான், ஒன்றிய துணைச்செயலாளர்கள் முருகேசன், சண்முகத்தாய், வடிவேல் முருகன், ஒன்றிய பிரதிநிதி ஈஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தினேஷ், சரவண பெருமாள், கரிவலம்வந்தநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் சண்முகசுந்தரி, சுப்புராஜ், பள்ளி மேம்பாட்டு குழு தலைவர் தனலட்சுமி, வர்த்தக அணி பாலு, பழனிவேல் ராஜன், ஒன்றிய இளைஞர் அணி யோகேஷ்குமார், அய்யனார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story