காவி என்பது தியாகத்தின் வண்ணம்: மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்


காவி என்பது தியாகத்தின் வண்ணம்: மு.க. ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்
x
தினத்தந்தி 22 April 2024 4:39 AM GMT (Updated: 22 April 2024 5:25 AM GMT)

நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி...அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

'தூர்தர்ஷன்' இலச்சினை காவிநிறமாக மாற்றப்பட்டு இருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்று கேள்வி கேட்கும் ஸ்டாலின் அவர்களே....ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்தே உள்ளது.

எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்?DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள்.

காவி என்பது தியாகத்தின் வண்ணம்.... நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி...அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story