சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து


சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து
x

தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ் உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் இன்று (மார்ச். 11) அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரெஞ்சுப் பாதிரியாரின் அனுபவத்தையும் பழங்குடி பண்பாட்டையும் விளக்கும் (THE BLACK HILL) எனும் நாவலை கருங்குன்றம் என்ற தலைப்பில் மொழி பெயர்த்து சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் கண்ணையன் தட்சிணா மூர்த்தியின் ஆக்கப்பூர்வமான எழுத்துப் பணிகள் தொடர எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story